உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது.

113 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரோகித் ஷர்மா

ஹசன் அலி பந்துவீச்சில் வஹாப் கேட்ச் பிடிக்க அவர் அவுட் ஆனார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து விளாசினார் ரோகித் சர்மா

201906161718199949_Rohit-Sharma-completes-century-in-85-balls-against-Pakistan_SECVPF.gifஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்
மான்செஸ்டர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ரோகித் சர்மா சதம் அடித்து விளாசினார்.
85 பந்துகளில் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா சதம் விளாசினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுவரை இவர், 330 போட்டியில், 357 சிக்சர் தெறிக்கவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச ‘டுவென்டி-20’) அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (355 சிக்சர்) முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித் சர்மா.
Share.
Leave A Reply

Exit mobile version