சென்னை:கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் போனி கபூர் தயாரிக்கும் இந்தி படம் மூலம் பாலிவுட் செல்கிறார்.

கீர்த்தி நடிக்க வந்ததில் இருந்து பூசினாற் போன்று தான் இருந்தார். பாலிவுட் நடிகைகள் அனைவரும் குச்சி, குச்சியாக இருப்பதால் கீர்த்திக்கும் தனது உடல் எடையை குறைக்கும் ஆசை ஏற்பட்டது.

பாலிவுட் பட வேலை துவங்குவதற்குள் அங்குள்ள நடிகைகள் போன்று ஒல்லிக் குச்சியாக மாற வேண்டும் என்று தீர்மானித்தார் கீர்த்தி சுரேஷ்.

இதையடுத்து ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்தார். மேலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறார்.

அவர் வியர்வை சிந்தி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தது பலன் அளித்துள்ளது. கீர்த்தி ஒல்லியாகிவிட்டார்.

<

கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்பெயினில் உள்ளார். அங்கு அவர் ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

அந்த புகைப்படத்தை பார்த்தால் அது கீர்த்தி சுரேஷ் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஆள் அடையாளமே தெரியவில்லை. சற்று நேரம் உற்றுப் பார்த்தால் தான் கீர்த்தி என்பதே தெரிகிறது.

 

கீர்த்தி ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்து உடல் எடையை இந்த அளவுக்கு குறைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

 

அவருக்கு பூசினாற் போன்று இருப்பது தான் அழகு என்கிறார்கள் ரசிகர்கள். கீர்த்துமா, உங்களை பார்த்தால் சீக்கு கோழி மாதிரி இருக்கிறது.

 

தயவு செய்து நன்றாக சாப்பிட்டு பழையபடி மாறுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்மதுடு 2 தெலுங்கு படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் நாகர்ஜுனா ஜோடியாக நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அப்பா வயது நபருடன் போய் ஜோடி சேர்ந்துள்ளீர்களே, வேண்டாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறியதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள போதிலும், நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் எடையை குறைப்பதும், கூட்டுவதும் அவரவர் விருப்பம். இதற்காக யாரையும் கிண்டல் செய்ய வேண்டாமே.

Share.
Leave A Reply

Exit mobile version