தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் வினயராஜ். 55 வயதாகும் இவர் தன் மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த மார்ச் 3-ம் தேதி இருவரும் தங்களின் மகளை கோவை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் நரசிம்மநாயக்கன்பாளையம் திரும்பினர்.
காரை வினயராஜ் ஓட்டியுள்ளார். நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே பகவான் கார்டன் நோக்கிச் செல்ல காரை வலது பக்கமாக திருப்பியபோது, மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதியது.
இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. படுகாயமடைந்த சாந்தி உயிரிழந்தார். வினயராஜ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
அதில் மறுபுறம் பேசியவர் காணாமல் போன வினயராஜ். போனிலும் மனைவியை விசாரித்துள்ளார்.
அப்போதுதான் அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. அவர் போன் செய்த நம்பரை வைத்து போலீஸின் உதவியுடன் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
7-ம் தேதி வீட்டில் இருந்து கையில் பணம், செல்போன் என எதையும் எடுக்காமல் சென்ற வினயராஜ், 300 கி.மீ தூரம் நடந்தே தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றுள்ளார்.
அங்கு ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவரிடமும், “மனைவியைத் தேடி வந்துள்ளேன். அவளுக்குப் போன் பண்ண வேண்டும்” எனக் கூறி அவரது போனை வாங்கி மனைவி நம்பருக்குப் போன் செய்துள்ளார்.
ஞாபக சக்தியை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய பின்பும், மனைவியின் போன் நம்பரைச் சரியாக ஞாபகம் வைத்து அவர் போன் செய்ததே அவரை மீண்டும் கண்டுபிடிக்க உதவியுள்ளது.
அவர் போன் செய்த நம்பரை போலீஸின் உதவியுடன் டிரேஸ் செய்த குடும்பத்தினர் கும்பகோணத்தில் வைத்து மீட்டுள்ளனர்.
மனைவியின் மீதுள்ள பாசத்தில் அவர் 300 கி.மீ பயணம் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச்செய்துள்ளது.