கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.