மாகொல, சிறிமங்கல வீதியிலுள்ள வீடொன்றில் உறக்கத்திலிருந்த கணவனை கல்லால் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான மனைவியை கைது செய்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை நேற்று முன்தினம் காலை இடம்ெபற்றுள்ளதாகவும், சம்பவத்தின் பின்னர் வீட்டிலிருந்து வெளியேறியிருந்த சந்தேகநபரான மனைவி, மீண்டும் அன்று பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து சடலத்தை பரிசோதித்துவிட்டு சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கடுமையாக ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்று மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.