தொண்டமனாறு கடல் நீரேரியில் நீராக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் நீராடிக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version