மாகொல, சிறி­மங்­கல வீதி­யி­லுள்ள வீடொன்றில் உறக்­கத்­தி­லி­ருந்த கண­வனை கல்லால் தாக்கிக் கொலை செய்­த­தாகக் கூறப்­படும் சந்­தேக நப­ரான மனை­வியை கைது செய்­துள்­ள­தாக சபு­கஸ்­கந்த பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்தக் கொலை நேற்று முன்­தினம் காலை இடம்ெ­பற்­றுள்­ள­தா­கவும், சம்­ப­வத்தின் பின்னர் வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்த சந்­தே­க­ந­ப­ரான மனைவி, மீண்டும் அன்று பிற்­பகல் 2 மணிக்கு வீட்­டுக்கு வந்து சட­லத்தை பரி­சோ­தித்­து­விட்டு சபு­கஸ்­கந்த பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று சர­ண­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

asewqமாகொல, சிறி­மங்­கல வீதியைச் சேர்ந்த 23 வய­தான ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

உயி­ரி­ழந்த நபர் கடு­மை­யாக ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யா­னவர் என்றும், அவர் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் என்றும் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் சபு­கஸ்­கந்த பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சந்­தே­க­ந­பரை நேற்று மஹர நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version