ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜகபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆயியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் மிகவும் சுவாரஷ்யமாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும்  அருகில் இருந்தார்.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கைகொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மிகவும் அன்னியோன்னியமாக அளவலாடிக்கொண்டிருந்தார்.பின்னர் இவர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பலரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த வெளிநாட்டு தூதுவர்கள் ராஜதந்திர அதிகாரிகள் என பலரும் இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு  கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version