வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.