1547 : நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.

1581 : இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்ட விரோதமானதாக்கியது.

1707 : ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியமாக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

1761 : இந்தியாவின் பாண்டிச்சேரியை பிரான்ஸிடமிருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

1795 : நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தை பிரான்ஸ், கைப்பற்றியது.

1864 : ஜேர்மனி மீது டென்மார்க் போர் தொடுத்தது.

.

1909 : ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

1945 : ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்துக்கு தப்பிச் சென்றார்.

1956 : எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் பலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.

1979 : ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

1991 : ஈராக் மீது ஐக்கிய அமெரிக்கா போர்ப்பிரகனடம் செய்தது. அமெரிக்க நேரப்படி இத்தினத்தில் வளைகுடா யுத்தம் ஆரம்பமாகியது.

1992 : எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்ஸிகோ நகரில் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1993 : விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

2001 : கொங்கோ ஜனாதிபதி லோரன்ட் கபிலா, அவரின் மெய்க்காவலர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2002: ஒசாமா பின் லாடனினதும் அல் கைதா, தலிபான் அமைப்புகளினதும் சொத்துக்களை முடக்குவதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.

SLMM_car_in_Mullaitivu_Sri_Lanka
2008: இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது பணிகளை நிறுத்தியது

2008: இலங்கையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது பணிகளை நிறுத்தியது

2006 : எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் ஜனாதிபதியானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2003 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமிக்குத் திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

2008 : இலங்கையில் பல்தேசிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.

2013: அல்ஜீரியாவில் வெளிநாட்டுத் தொழிலாளிகள் 41 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

2016: புர்கினா பெஸோவில் உல்லாச ஹோட்டலொன்றில் பயங்கரவாதிகள் முற்றுiகியட்டு நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக்கினர். இவர்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். 56 காயமடைந்தனர். 176 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version