யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 22 வயதுடைய ரவீந்திரன் தனுசன் எனத் தெரியவருகின்றது.
வடமராட்சி – அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்துள்ளார்.