இரண்டு பெண்கள் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லி­களை அப­க­ரித்துச் சென்றார் எனக் கூறப்­படும் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்தச் சம்­ப­வங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு புற­நகர்ப் பகு­தி­யிலும் ஏறாவூர் நக­ரிலும் இடம்­பெற்­றுள்­ளன.

மட்­டக்­க­ளப்பின் புற­நகர்ப் பகு­தி­யான சுவிஸ் கிரா­மத்தில் வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­ட­மி­ருந்த தங்கச் சங்­கி­லியை அப­க­ரித்த சந்­தேக நபர் கடற்­க­ரை­யோர சவுக்­கடி வீதி வழி­யாக மோட்டார் சைக்­கிளில் ஏறா­வூரை நோக்கிச் சென்­றுள்ளார்.

இந்த நிலையில், ஏறாவூர் பழைய சந்தை வீதியில் மற்­றொரு பெண்ணின் தங்கச் தங்கச் சங்­கிலி­யையும் குறித்த நபர் அப­க­ரித்து தப்பிச் சென்­றுள்ளார்.

CCTV-eravur-sl.jpg-1இந்தச் சம்­ப­வங்கள் தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து துரி­த­மாகச் செயற்­பட்ட ஏறாவூர் பொலிஸார், குறித்த பிர­தே­சங்­களில் காணப்­பட்ட கண்­கா­ணிப்புக் கெமரா பதி­வு­களின் உத­வி­யு­டனும் புல­னாய்வு விசா­ரணை அடிப்­ப­டை­யிலும் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஒரு­வரை நேற்றுக் கைது செய்­துள்­ளனர்.

சந்­தேக நபர் பயன்­ப­டுத்திய மோட் டார் சைக்­கி­ளையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். ஏறாவூர் பொலி­ஸாரும் மட்­டக்­க­ளப்பு பொலி­ஸாரும் இணைந்து இந்தச் சம்­ப­வங்கள் தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version