உலகளவில் முககவசத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள சீனர்கள் கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளினால் உருவாக்கப்பட்ட முககவசங்களை அணிந்துள்ளனர்.
கொடிய கொரோனா வைரஸ் ஏற்கனவே உலகம் முழுவதும் 132 க்கும் மேற்பட்டவர்களைக் காவுகொண்டுள்ளது.
இதன் பரவலை கட்டுபடுத்த முக கவசம் மற்றும் பிற பாதுகாப்பு பொருட்கள் ழுமுமையான பாதுகாப்பை வழங்கவில்லை என்பதாலும் முககவசங்களுக்கு எழுந்துள்ள தட்டுபாட்டை அடுத்தும் இது போன்ற நடைமுறைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் சீனர்கள்.
பிளாஸ்ரிக் போத்தல் மட்டுமன்றி பிளாஸ்ரிக்பைகளையும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களையும் அணிந்துள்ள சீனர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரைலாகியுள்ளன.
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி இதவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் பரவலை கட்டுபடுத்த, மூககவசம் அணிவதற்கும், சவற்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை தவறாமல் கழுவவும், உணவு, பானம் மற்றும் பாத்திரங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும் சுகாதார நிபுணர்கள் மக்களை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.