சீன வைத்தியசாலையொன்றில் இரவும் பகலும் உறங்காமல் பணியாற்றுவதால் மருத்துவர்கள் அழுகின்ற காட்சி அடங்கிய வீடியோ, சீன சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மருத்துவர்கள் உறங்காமல் நீண்டநேரம் பணியாற்றுவதால் களைப்படைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த வீடியோ உண்மையானது அல்ல என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் வெகுவாக பாதிக்கப்பட்ட வுஹான் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் மேலங்கி அணிந்த பெண்ணொருவர், இனியும் நான் இங்கிருக்க முடியாது எனக் கூறி அழுவதுடன், ஏனைய பெண்கள் அவரை தேற்றும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு வீடியோவில் வைத்தியாலை முகாமையாளர் ஒருவரை ஆண் மருத்துவர் ஒருவர் திட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.
எனினும், இந்த வீடியோக்கள் உண்மையானவை அல்ல என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்சிகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனப் பிரதமர் லீ கேகியாங், வுஹான் நகரில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை சந்தித்து உரையாடினார்.
வுஹான் நகரில் 10 தினங்களில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள வைத்தியசாலை நிர்மாணப் பணிகளையும் அவர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
படம்: சீனப் பிரதமர் லீ கேகியாங்
வீடியோ: