மாலைதீவில் நீச்சலுடையுடன் காணப்பட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணியான யுவதியின் உடலை மறைப்பதற்கு பொலிஸார் பலவந்தமாக நடவடிக்கை மேற்கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாலைதீவு பொலிஸ் திணைக்களத்தின் தலைவரான பொலிஸ் ஆணையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சிசிலியா
மேற்படி யுவதி பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பிரபலங்களில் ஒருவரான சிசிலியா ஜஸ்டிர்ஸெம்ஸ்கா என்பது குறிப்பிடத்தக்கது.
உல்லாசப் பயணத்துக்குப் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான மாலைதீவின் உல்லாசப் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்கள் பிகினி எனும் நீச்சலுடைய அணிய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், சுற்றுலாப் பிரதேசங்கள் தவிர்ந்த இடங்களில் நீச்சலுடை அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் மாலைதீவின் தீவுகளில் ஒன்றான மாபுஷியிலுள்ள கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை நீச்சலுடையுடன் சிசிலியா காணப்பட்டார்.
அப்போது மாலைதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்பதற்கு முயற்சித்தனர்.
துவாய் ஒன்றின் மூலம் சிசிலியாவின் உடலை மறைப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்தனர்.
இதனால், மேற்படி ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சிசிலியாவுக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.
தன்னை பாலியல் ரீதியில் பொலிஸார் தாக்குவதாக சிசிலியா கூறினார்.
இதன் போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
26 வயதான சிசிலியா ஜஸ்டிர்ஸெம்ஸ்கா, பிரிட்டனில் ஃபெர்ஸ்ட் டேட்ஸ், நின்ஜா வோரியர் முதலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருவதாக மாலைதீவின் பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத் தெரிவித்துள் ளார்.
இவ்விடயத்தை பொலி ஸார் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என அவர் தெரிவித் துள்ளார்.
மாலைதீவு பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத்
வீடியோ: