ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானமொன்று இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
ஷிக்யா என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளார்.
கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘வெய்யோன் சில்லி’ பாடலை விமானத்தில் பறந்துகொண்டே நடுவானில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்தனர்.
சூரரைப் போற்று படக்குழுவுடன் ‘தங்களது மிகப்பெரிய கனவு’ என்ற தலைப்பில் மிகச்சிறந்த கட்டுரைகளை எழுதிய 70 மாணவர்கள் இந்த விமானப் பயணத்துக்குத் தேர்வாகி உள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்கள் என 100 பேர் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.