ரஷ்யாவில் 16 இராணுவத் தாங்கிகளை இதய வடிவில் நிறுத்தி இராணுவ வீரர் ஒருவர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 14) காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இளைஞர்களும், இளம்பெண்களும் விரும்பும் நபரிடம் தங்கள் காதலை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 

இதில் பலர் ரோஜா பூக்களை காதலன் அல்லது காதலிக்கு வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்தினர். சில காதலர்கள் வித்தியாசமாக இந்த காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

அதேபோல் ரஷ்யாவை சேர்ந்த இராணுவ ஒரு வீரர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

ரஷ்யாவின் அலபினோ பகுதியில் உள்ள இராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ்(23). இவர் அலெஸ்சாண்டிரியா(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த வெள்ளிக்கிழமை அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் இராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார்.
russian-16-military-tanks-valentines-day.2

இதையடுத்து இராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் இராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றான்.

அங்கு டெனிஸ் சக வீரர்களின் உதவியுடன் மொத்தம் 16 இராணுவத் தாங்கிகளை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார்.

 

அப்போது கண்ணை திறந்த காதலி அலெஸ்சாண்டிரியா இராணுவ தாங்கிகளை இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன காதலை வெளிப்படுத்தியதைக்  கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார்.

கண்களைத் திறந்த காதலி அலெஸ்சாண்டிரியா இராணுவ தாங்கிகளை இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன காதலை வெளிப்படுத்தியதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார்.
‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? என்ற டெனிஸ் கென்ஸ்செவ்வின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த உடனடியாக ‘ஆம்’ என கூறி சம்மதம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version