1600 : பெருவின் ஹூவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்ததால் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர்.
1674 : இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூயோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1819 : பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1878 : கிரமபோனின் காப்புரிமத்தை தோமஸ் அல்வா எடிசன் பெற்றார்.
1915 : முதலாம் உலகப் போரின்போது கலிபொலி சமர் ஆரம்பமாகியது
1942 : இரண்டாம் உலகப் போரில் ஏறத்தாழ 250 ஜப்பானியப் போர் விமானங்கள் அவுஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1945 : இரண்டாம் உலகப் போரின்போது 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959 : ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 : சைப்பிரஸின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரஸின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியதில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1985 : ஸ்பெயினில் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் உயிரிழந்தனர்.
1986 : சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
2006: மெக்ஸிகோவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தினால் 65 பேர் பலியாகினர்.
2011: சிங்கப்பூருக்கு அருகில் மூழ்கியிருந்த சீனாவின் டாங் வம்சத்தின் புராதன கலைப்பொருட்கள் அடங்கிய கப்பல் சிதைவொன்றை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
2012: மெக்ஸிகோ சிறையொன்றில் ஏற்பட்ட வன்முறையில் 43 பேர் உயிரிழந்தனர்.
2017: களுத்துறை மாவட்டத்தின் கட்டுக்குருந்தை கடற்பகுதியில் மத உற்சவமொன்றின்போது படகு கவிழ்ந்தால் 16 பேர் உயிரிழந்தனர்.