அயர்ன் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க்  பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது.

திரையில் பறக்கும் அயர்ன் மேன் கதாபாத்திரத்தை நிஜத்தில் நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்  டுபாயின் சாகச வீரர்.

ஜெட்மேன் டுபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ரெஃபெட், கார்பன்- ஃபைபர் சூட்டைப் பயன்படுத்தி தரையில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி வரை காற்றில் பறந்துள்ளார்.

இவர் இந்த பயணத்தில், எட்டு வினாடிகளில் [ரெஃபெட்] 100 மீற்றர் உயரத்தையும், 12 ஆவது வினாடியில் 200 மீற்றரையும், 19 ஆவது வினாடியில்  500 மீற்றரையும்,  130 ஆவது வினாடியில்  1000 மீற்றரையும் எட்டியுள்ளார்.

இது அதிவேக தனிநபர் பைலட் உடைகள் உருவாக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் அல்ல, எனினும் ஒரு மனிதன் ஒரு ராக்கெட் போல காற்றில் பறப்பதற்கு முன்பு, தரையில் நின்று பூமியின் மீது சுற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒரு ஜெட்மேன் டுபாய் நிறுவனத்தின் விமானி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பாதுகாப்பாக சுற்றுவதையும், அதே விமானத்தில் அதிக உயரத்தில் பறக்கும் ஏரோபாட்டிக்ஸையும் இணைப்பது இதுவே முதல் முறை” என்று நிறுவனம் குறிப்பிட்டது.

“மனித உடலால் தரையில் இருந்து கட்டுப்படுத்தப்படும் இந்த உபகரணங்கள் 400 கிலோமிற்றர் வேகத்தில் பயணிக்கின்றது, அத்துடன் வட்டமிடுதல், திசையை மாற்றுவது மற்றும் சுழல்வது போன்ற செயற்பாடுகளை  இப் புதிய கார்பன்-ஃபைபர் சூட் செயல்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளது.

இதேவேளை இதற்கு முன்பதாக ரிச்சர்ட் பிரவுனிங் உலகின் அதிவேக தனிப்பட்ட ஜெட் சூட்டை உறுவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானி ரெஃபெட், கார்பன்-ஃபைபர் சூட்டைப் பயன்படுத்தி  பறக்கும் காணொளியை  ஜெட்மேன் தடுபாய் நிறுவனம் யூடியுபில் வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version