பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயிமுல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணிக்காயை சந்தைப்படுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேசத்தை சேர்ந்த துரை என அழைக்கப்படும் கமலராஜன் என்ற விவசாயி சுமார் நான்கு ஏக்கர் காணியில் பூசணியை பயிரிட்டுள்ளார்.
இதற்காக சுமார் நான்கு இலட்சம் வரை செலவளித்த நிலையில், பூசணிக்காய்களை அறுவடை செய்து விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு சென்ற போது அவரால் அதனை சந்தைப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

