மிக இக்கட்டான தருணத்தில் வணக்கம் சொல்லும் முறைதான் தன்னை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

அண்மையில் அயர்லாந்து பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கருடன் கை குலுக்காமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வணக்கம் தெரிவித்தார்.

அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்தது குறித்து ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

“கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால். இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்து வருகிறேன்“ என்றார்.

 

வணக்கம் சொல்லி வரவேற்பது திராவிட பாரம்பரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version