உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்,  இத்தாலியே காணப்படுகின்றது.

இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது.

vvvvமிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் “எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )” என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது.

இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் “வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் சந்தித்திருக்கம் இக்கட்டான சூழ்நிலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.வாழ்க்கை எப்போதும் ஓரிடத்தில் நிற்கக் கூடியதில்லை என்பதற்கு நீங்களே சான்று” என பதிவிட்டிருந்தது.

மேலும், “இப்போதுள்ள சூழ்நிலையில் உலகிலேயே மிகவும் அழகான புகைப்படம் இதுவே ”எனவும், எங்களின் பிரார்த்தனையே வாழ்க்கையின் பலம்” எனவும் பலர்  பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version