Site icon ilakkiyainfo

சுவிஸில் 6,000 மேற்பட்டோருக்கு கொறோனா; 24 மணி நேரத்தில் 1,273 பேருக்கு தொற்றியது

சுவிற்சர்லாந்தில் கொறோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. நேற்றைய நிலையில் 6,113 பேருக்கு கொறோனா என சுவிஸ் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 56 பேர் இது வரை இறந்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 50% பேர் 51 வயதிற்கு குறைந்தவர்கள் ஆவார்கள்!

100’000 குடிமக்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்- என்ற அடிப்படையில் திசினோ, வாட் மற்றும் கெறபுய்ன்டென் ஆகிய மூன்று மாநிலங்களிலுமே கொறோனா தாக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று ஐந்து பேரிற்கு மேற்பட்டவர்கள் வெளியே ஒன்றாகச்சென்றமையினால் சூரிச் மாநில காவற்துறை பல முறை கண்காணிப்பிற்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. சுவிஸ் அரசின் அனைத்து விதிமுறைகளையும் மக்கள் கடைப்பிடித்தால் தான் இந்த வைரஸ் தாக்கத்தை குறைக்கலாம் என பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை சுவிஸ் நாட்டில் இருந்து கொலும்பியா மற்றும் பெரூ நாட்டிற்குச்சென்ற 630 பேர் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் “எடேல்வைஸ் எயார்லைன்ஸ்” மூலம் மறுபடியும் நாட்டிற்குத் திரும்பி வருவதற்கு அரசு ஒழுங்கு செய்திருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில் 85,000 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன செய்திகளின் படி “வூகான்” இல் கொரோனா வைரஸ் தொற்றேற்பட்டோரிற்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாகப் போடப்பட்ட மருத்துவமனை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டோம் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திருந்து ர. நிதுர்ஷனா

Exit mobile version