‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
202003230740040041_1_keend._L_styvpf
இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார்.
அதன்படி , பெண்குயின் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் அது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.:
Share.
Leave A Reply

Exit mobile version