பிரிட்டனில் முடக்கநிலை

பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில் கணிசமான காலத்துக்கு முடக்க நிலைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

வரும் வாரங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்று பிரிட்டனின் அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ‘கணிசமான காலத்துக்கு கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்’ என்று அவர் கூறியிருந்தாலும், அது எவ்வளவு காலம் என்று குறிப்பிடவில்லை.

ஜூன் மாதம் வரை இது நீடிக்கலாம் என்று மூத்த அரசு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த கைக்குழந்தை

அமெரிக்காவில் முதன்முறையாக பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

அக்குழந்தை சிகாகோவில் உயிரிழந்ததாக இல்லினோயிஸின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக சீனாவில் கொரோனா தொற்றால் கைக்குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

544618கொரோனா வைரஸ் – சமீபத்திய நிலவரங்கள்

ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஒரு நாளைக்கு மட்டும் 800-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

பனாமாவின் ”சாந்தாம்” என்ற சொகுசு கப்பலில் இருந்த 1,800 பயணிகளில் நான்கு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு இன்றி நல்ல உடல் நிலையுடன் இருப்பவர்கள்வேறு கப்பலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக தென்படுகிறது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது

Share.
Leave A Reply

Exit mobile version