கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும்  கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.

unnamedஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார்.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version