தமிழகத்தின் சென்னை நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்இ கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்துஇ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.
இதனை தடுக்க தமிழக அரசும்இ சுகாதார துறைஇ காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்இ நோய் தொற்றின் தீவிரம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனினும் இத்தொற்றுநோயின் தீவிரம் தெரியாமல் வாகனமோட்டிகளும் பாதசாரிகளும் வீதிகளில் நடமாடுகின்றனர்.
அந்த பகுதி வழியாக அநாவசியமாக வெளியே சுற்றும் வாகனமோட்டிகளை மறித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரித்தார்.
அதே போல மக்கள் அதிகம் கூடும் இடமான வில்லிவாக்கம் மார்கெட் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு சென்று சமூக விலகல் குறித்தும் முகக்கவசம் இல்லாமல் வெளியே சுற்றகூடாது எனவும் எச்சரித்தார். (படங்கள்: ஏ.எவ்.பி)
(வீடியோ)