இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 823,200 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 40,633 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில்  177,333 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.

இத்தாலியில்  கொரோனாவினால் மேலும் 833 பேர் உயிரிழந்துள்ளனர் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12428  ஆக  அதிகரித்துள்ளது.  அங்கு 105,792 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 15,729 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெய்னில் மேலும் 553 பேர் உயிரிழந்துள்ளனர் என இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, அங்கு பலியானோர் எண்ணிக்கை  8,269 ஆக அதிகரித்துள்ளது.  அந்நாட்டில் 94,417 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில்  19,259 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மேலும் 261 பேர் உயிரிழந்தனர் என இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அங்கு 3402 பேர் இறந்துள்ளனர்.  6215 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

158036250035605சீனாவில் இன்று  5 புதிய மரணங்களும் 79 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. அந்நாட்டில் மொத்தமாக 81,518 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இவர்களில் 3305 பேர் இறந்துள்ளனர். அதேவேளை, 76052 பேர் குணமடைந்துள்ளனர்.

ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும் 141  பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை  2,898 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 44,605  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 14,656  பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா வைரஸினால் 3024 பேர் இறந்துள்ளனர். அங்கு 44,550 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 5,700 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 1789 பேர் இறந்துள்ளனர்.  25,150 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது

நெதர்லாந்தில் 1039 பேர் இறந்துள்ளனர். அங்கு 12595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 682 பேர் இறந்துள்ளனர். 68180 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் 395 பேர் இறந்துள்ளனர். அங்கு 16,186 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

 தென் கொரியாவில் இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 9786  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5408 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version