உலகும் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச பொருளாதாராம் பாதிக்கப்படும் என பரவலாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்தியங்களில் வறுமை நிலையில் வாழும் 2.4 கோடி மக்கள் தங்கள் வறுமையில் இருந்து மீள முடியாத நிலை ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது நிலவும் இந்த மோசமான சூழ்நிலையில், சீனாவில் உள்ள 2.5 கோடி மக்கள் உட்பட 3.5 கோடி மக்கள் வறுமையிலேயே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
அதாவது ஒரு நாளுக்கு 5.5 டாலர்கள் (சுமார் 390 இந்திய ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான வருவாயில் வாழ்பவர்களை வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுபவர்களாக உலக வங்கி குறிக்கிறது.
வளர்ந்து வரும் கிழக்கு ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2.1% ஆக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
.