கொரோனா வைரஸினால் ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைகடந்துள்ளது.

நேற்று மேலும் 950 பேர் ஸ்பெய்னில் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி அங்கு கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,003 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெய்னில் 110,238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 26743 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 950,063 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 48,250 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 201571 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது. ஆகக்கூடுதலாக இத்தாலியில் 13,155 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version