2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டு, உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என பார்வையற்ற ஜப்பானிய பெண் ரையோ தத்சுகி (பாபா வங்கா) கூறியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலக நாணய அமைப்புகள் சீர்குலைவு, வங்கி தோல்விகள், அதிக பணவீக்கம் போன்ற அபாயங்கள் உருவாகலாம் எனவும் அவர் கணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்பின் காரணமாக நிபுணர்களிடையே 2026 உலக பொருளாதார நிலைமை குறித்து புதிய அச்சங்கள் எழுந்துள்ளன.

