ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய நேரம் காலை 10 மணி வரை 9,37,170-ஆக உள்ளது.
எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.
உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம்
நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
அமெரிக்கா 215,417
இத்தாலி 110,574
ஸ்பெயின் 104,118
சீனா 82,381
ஜெர்மனி 77,981
பிரான்ஸ் 57,763
இரான் 47,593
பிரிட்டன் 29,865
சுவிட்ஸர்லாந்து 17,768
துருக்கி 15,679
ஆதாரம் – ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
உலகளவில் சமீபத்திய நிலவரங்கள் என்ன?
நெதர்லாந்தில் மேலும் புதிதாக 134 பேர் உயிரழந்திருக்க, அங்கு உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1,175ஆக உள்ளது. எனினும், மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹஜ் புனித யாத்திரையாக மெக்கா மற்றும் மதீனா செல்வோர் தங்களது முன்பதிவுகளை தற்போது செய்யாமல், சற்று தாமதமாக்கும்படி முஸ்லிம் மக்களை செளதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் தற்போது வரை 488 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,777ஆக உள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 24 பேர் இறந்துள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மருத்துவ உபகரணங்களின் தரம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதன் தரத்தை உறுதிபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறதாக சீனா தெரிவித்துள்ளது.
தேசிய நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் கடன் நிவாரணத்திற்காக 100 பில்லியன் டாலர்ளை, அவசர நிதியாக ஆப்பிரிக்க நித அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.
உலக அளவில் பாதிப்பு, உயிரிழப்பு என்ன?
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, இந்திய நேரம் காலை 9 வரை உலகளவில் 9,35,800க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.47,208 பேர்உயிரிழந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை சுட்டுவிடுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர்
நாட்டில் கோவிட் 19 காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் கலவரம் செய்தால் அவர்களை சுட்டு விடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே உத்தரவிட்டுள்ளார்.
மெட்ரோ மணிலாவில் உணவு முறையாக விநியோகிக்கப்படவில்லை என இடதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தை தொடங்கியதையடுத்து, அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
“பிரச்சனை ஏற்பட்டு சண்டையிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அவர்களை சுட்டுவிடுங்கள்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் “மேம்படுத்தப்பட்ட சமூக தனிமைப்படுத்துதல்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் நாய் கூண்டுகளில் அடைக்கப்படுவது அல்லது உச்சி வெய்யிலில் அமர நிர்பந்திக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவது மனித உரிமை அமைப்புகளை கவலையடைய செய்துள்ளது.
அடுத்தடுத்து மரணங்கள் – கடும் பாதிப்பில் ஸ்பெயின்
ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 864 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்பெயனில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9000த்தை கடந்துவிட்டது.
இத்தாலியை அடுத்து ஸ்பெயினில்தான் அதிக மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. மொத்தமாக ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.