வாஷிங்டன் : கொரோனாவால் நேரிட்ட உண்மையான பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் 3,312 பேர் மட்டுமே பலியாகி உள்ள நிலையில், அமெரிக்காவில் 5,112 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை அமெரிக்கா முந்தியுள்ளது. சீனாவில் 81,589 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் 215,344 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் 20% குறைவாக வெளியிடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

unnamedஇந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாகவும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை என தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பு புள்ளி விவரங்களை சீனா மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி பேசிய அவர், தான் ஒன்னும் சீனாவின் கணக்காளர் இல்லை என்றும் சீனா வெளியிடும் கொரோனா புள்ளி விவரங்கள் துல்லியமானவையா இல்லையா என்பது தனக்கு எப்படி தெரியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version