தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார். தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
‘வன்மம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார். இவர் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார்.
கிருஷ்ணா, சுனைனா ஜோடியாக சுற்றி காதலை தீவிரமாக்கி இருப்பதாகவும், 2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.