கொரோனா வைரசிற்கு எதிரான போரில் ஐக்கிய இராச்சியம் வெற்றிபெறும் என எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் மக்களிற்கு ஆற்றியுள்ள உரையில் அவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி இதனை தெரிவித்துள்ளார்.
வீடுகளில் இருப்பதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்காக மக்களிற்கு நன்றியை தெரிவித்துள்ள அவர் ஏனையவர்களிற்கு உதவுவதற்காக அணிதிரள்பவர்களை பாராட்டியுள்ளார்.
கொரோன வைரசிற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய தொழிலாளர்களிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு மணித்தியால பணியும் எங்களை இயல்பு வாழ்க்கையை அருகில் இட்டுச்செல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் முன்னர் பல சவால்களை சந்தித்துள்ளோம் இது வித்தியாசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நாங்கள் உலகின் அனைத்து நாடுகளுடனும் பொதுவான நோக்கமொன்றிற்காக நாங்கள் இணைந்துகொண்டுள்ளோம்,விஞ்ஞானத்தின் பாரிய முன்னேற்ங்களையும்,குணப்படுத்து வதற்கான எங்கள் உள்ளாந்த உணர்வையும் பயன்படுத்துகின்றோம்-இந்த வெற்றி எங்கள் அனைவருக்கும் உரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இன்னமும் நெருக்கடிகளை சந்திக்கவேண்டியிருக்கும் ஆனால் சிறப்பான நாட்கள் மீண்டும் வரும் என்பது குறித்து நாங்கள் நிம்மதியடையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக தனிமைப்படுத்தல் காரணமாக தாங்கள் நேசிப்பவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள துயரமான நிலை இரண்டாம் உலக யுத்தத்தின் போது குழந்தைகள் சிறுவர்கள் சந்தித்த அனுபவத்தை நினைவுபடுத்துகின்றது என எலிசபத் மகாராணி தெரிவித்துள்ளார்.
முன்னரை போன்று தற்போதும் அது சரியான நடவடிக்கை என நாங்கள் ஆழமாக தெரிந்து வைத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் இருக்குமாறு விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும் அனைவரும் பலவீனமான நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கு உதவுகின்றனர்,தங்களின் அன்புக்குரியவர்களை இழந்ததால் பல குடும்பங்கள் அடைந்துள்ள துயரத்தினை ஏனையவர்களும் எதிர்கொள்வதை தடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.