அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது.

உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியது.

இதேபோல் நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன.

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 9,618 ஆக உள்ளது. நியூயார்க் மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு இரண்டரை நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருவதால் சுகாதாரத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version