இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்தான் சிறந்த வழி என கூறப்படுகிறது.
அது போல் வெளியே செல்வதையும் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாய்லாந்தில் இதுவரை 1,651 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுள் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தாய்லாந்து மன்னர் வஜிராலங்கொர்ன் ஜெர்மனியில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார். 67 வயதாகும் அவர் ஆன்பைன் ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் ஹோட்டல் சோனேன்பிச்சியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மன்னரின் மனைவிகள்
பணியாட்கள், 20 பெண்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே அழைத்து சென்றுள்ளார். எனினும் கொரோனா அச்சம் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் 100-க்கும் மேற்பட்டோரை திருப்பி அனுப்பிவிட்டது.
இந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் தனது 4 மனைவிகளையும் மன்னர் அழைத்து சென்றாரா என தெரியவில்லை. வழக்கம்போல் ஏராளமான பணியாட்களையும் அழைத்து சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவே சென்றுள்ளது போல் தெரிகிறது.
நாட்டின் அரசி
மேலும் இதற்கு பேர்தான் தனிமைப்படுத்துதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மன்னர் கடந்த ஆண்டு மே மாதம் தனது பாதுகாப்பு அதிகாரியான சுஜிதா தீட்ஜாவை காதலித்து 4 ஆவது திருமணம் செய்து கொண்டார். அவரை நாட்டின் அரசியாகவும் அறிவித்துள்ளார்.