இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் மத்தியிலான அச்ச நிலைமை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தாய்மார், அல்லது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகிக்கப்படும் தாய்மார், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித பிரச்சனையும் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லையெனவும், தாய்ப்பால் லழங்காவிட்டால், குழந்தைகளுக்கான நோய் எதிரிப்பு சக்தி குறைந்து, தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வைத்திய நிபுணர் சமன் குமார் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version