கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தற்போது 160,000 யும் கடந்து விட்டதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தரவுகள் தெரிவித்துள்ளன.
அதன்படி இதுவரையில் 185 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 160,721 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையும் 2.3 மில்லியனை (2,329,651) கடந்துள்ளது. 598,228 பேர் பூரண குணமடைந்தும் உள்ளனர்.
சனிக்கிழமையன்று 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம் 1,849 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
கொரோனாவினால் அதிளவாக பதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் முன்னிலையில் உள்ள அமெரிக்காவில் தற்போது வரை 735,086 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 38,903 கடந்துள்ளது.
அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகள் :
- அமெரிக்கா: 735,086
- ஸ்பெய்ன்: 194,416
- இத்தாலி: 175,925
- பிரான்ஸ்: 152,978
- ஜேர்மன்: 143,724
- பிரிட்டன்: 115,314
- சீனா: 83,804
- துருக்கி: 82,329
- ஈரான்: 80,868
கொரோனாவால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள்:
- அமெரிக்கா: 38,903
- இத்தாலி: 23,227
- ஸ்பெய்ன்: 20,639
- பிரான்ஸ்: 19,323
- பிரிட்டன்: 15,464
- பெல்ஜியம்: 5,453
- ஈரான்: 5,031
- ஜேர்மன்: 4,538
- சீனா: 4,512
- நெதர்லாந்து: 3,601
- பிரேஸில்: 2,372
- துருப்கி: 1,890
- சுவீடன்: 1,511
- சுவிடசர்லாந்து: 1,368