அமெரிக்கா தனது படையினரை கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஏனையவர்களை மோதலிற்கு இழுப்பதற்கு பதில் அமெரிக்கா முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள தனது படையினரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆயுதபடையின் பேச்சாளர் அபொல்பசல் செகராச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கப்பல்களிற்கு தொந்தரவு கொடுக்கும் ஈரானியகப்பல்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவற்றை அழித்துவிடுமாறு அமெரிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரானின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.