கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.
திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள ‘அறிவும், அன்பும்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல் மாஸ்டர் லிடியனுடைய இசையுடன் தொடங்குகிறது.
பாடகர்கள் பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஆண்ட்ரியா, சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.
“அறிவும், அன்பும்”
@RKFI @GhibranOfficial @anirudhofficial @Bombay_Jayashri @thisisysr #Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah @lydian_official @thinkmusicindia #MaheshNarayanan #ArivumAnbum pic.twitter.com/hhTDU8QD0m— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2020