பிரான்ஸில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 516-ஆல் உயர்ந்து இன்று 21,586ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் COVID-19 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,549

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 464ஆல் உயர்ந்த நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 25,549-ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இத்தாலியில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 2,646-ஆல் உயர்ந்து 189,973-ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,000ஐத் தாண்டியது

ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் 440 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 22,157-ஆக உயர்ந்துள்ளதுடன், COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 208,389-இலிருந்து 213,024ஆக உயர்ந்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version