நெதர்லாந்தில் புலம் பெயர்ந்த 28 கொரோனா நோயாளிகளை உல்லாச படகிற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறு நகரம், அர்ன்ஹெம். இங்குள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ருமேனியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் 2 வாகனங்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், நதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு படகில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அர்ன்ஹெம் நகர மேயர் மார்கவுச் கூறும்போது, “இது ஒரு பாதுகாப்பான தீர்வு. நகர மக்கள் நன்மை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் நன்கு குணம் அடையும் வரை இந்த படகில்தான் இருப்பார்கள்” என்றார்.

இதற்கிடையே இந்த 28 தொழிலாளர்களும் தங்கியிருந்த 3 வீடுகளில் மேலும் 21 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா நோயாளிகளை உல்லாச படகிற்கு அனுப்பி சிகிச்சை அளிப்பது நெதர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version