ஐந்து வயதான ஒரு சிறுவன் தனது பெற்றோரின் காரை செலுத்திக் கொண்டு தனியாக நெடுஞ்சாலையில் பயணித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
யுட்டாஹ் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதான அட்ரியன் ஸமாரிப்பா எனும் சிறுவன் . கடந்த திங்கட்கிழமை SUV ரக காரை செலுத்திக்கொண்டு மணித்தியாலத்துக்கு 30 மைல் (50 கிலோமீற்றர்) வேகத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும் தடத்தில் சென்றுகொண்டிருந்தான் என பொலஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துப் பொலிஸார் காரை நிறுத்த உத்தரவிட்டபோது. உத்தரவுக்குப் பணிந்து சாரதியினால் கார் நிறுத்தப்பட்டது.
ஆனால், காரின் அருகே சென்ற பொலிஸ் அதிகாரி, அக்காரின் சாரதி ஆசனத்தில் சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் என யுட்டாஹ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவன் தான் கலிபோர்னியா மாநிலத்துக்குச் சென்று, லம்போர்கினி கார் ஒன்றை வாங்கப் போவதாக பொலிஸாரிடம் கூறியுள்ளான்.
ஆமெரிக்காவில் விலை குறைவான லம்போர்கினி காரின் விலை சுமார் 180,000 டொலராக இருக்கும் எனத் தெரவிக்கப்படுகிறது.
எனினும், மேற்படி சிறுவனின் பணப்பையில் 3 டொலர்கள் மாத்திரமே இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் எவருக்கும் காயமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
சிறுவன் அட்ரியன் செலுத்திக் சென்ற காரை பொலிஸ் அதிகாரி நிறுத்தி விசாரிக்கும் காட்சி மற்றொரு வாகனத்தின் கெமராவில் பதிவாகியுள்ளது.
இச்சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரிக்குத் தெரியாமல் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, வெளியே சென்றுள்ளான் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் காரின் சாவியை அட்ரியனுக்கு எட்டாத இடத்தில் வைப்பதற்கும் அவன் குறித்து கூடுதல் கவனம் செலுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.