மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமான குடிமகன்கள் ஒன்றுக்கூடியிருந்தனர்.

அத்துடன், சமூக இடைவெளியை மறந்து மக்கள் செயற்பட்டுவருவதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து, குடிமகன்கள் அவதானத்துடன் செயற்படாவிட்டால் திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மீண்டும் மூட வேண்டி ஏற்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version