15 வயது சிறுமியொருவரை செவனகல பகுதியில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

17 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களில் குறித்த சிறுமியின் காதலனும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version