இலங்கையில்நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று பதிவானது.
அதற்கமைய நேற்று(26) மொத்தமாக 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் மிகுதி 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.