இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாளோரின் எண்ணிக்கை 1,500 ஐக் கடந்துள்ளது.
இன்று (28) மேலும் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,503 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் துபாயிலிருந்து நாடு திரும்பி தனிமைபடுத்தல் நிலையங்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தவர்களாவர்.
இதேவேளை,இன்று இதுவரை 34 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

