அமரர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

அமரர் ஆறுமுகம் தொண்டமானின்  பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

 

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட ஹெலிக்கொப்டரில் இன்று காலை கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அமரர் ஆறுமுகனின் பூதவுடலை எடுத்துச் சென்ற கெலிக்கொப்டர், கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வெவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.

 

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version