தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, விரைவில் கோடீஸ்வர குடும்பத்து பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவும், இயக்குனர் டி.ராஜேந்தரின் மகனுமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அவருக்கு பல இடங்களில் இருந்து மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் வந்து குவிந்தன. ஜாதகம் பொருந்தாததால் அவருடைய திருமணம் தள்ளிப்போனது.

சில ஜாதகங்கள் பொருந்தினால், சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த காரணங்களால் மணப்பெண் அமையவில்லை.

இது, அவருடைய குடும்பத்தினரை போலவே ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.

சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழும் வகையில், இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.

அவருக்கு லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணப்பெண், சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினராம்.

கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன. கொரோனா பிரச்சினைகள் முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் நடைபெறும் என்று அவருக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version